தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

பயனற்ற குடிநீர் தொட்டி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி எம்.ஜி.ஆர். நகர் பகுதி பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அங்கு குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மின் மோட்டார் பழுது ஏற்பட்டதன் காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் மோட்டார் பழுது பார்ப்பதற்காக எடுத்துச் சென்றனர். அதன் காரணமாக இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவது தடைபட்டது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ளநீர் ஊருக்குள் புகாமல் தடுக்க கோரிக்கை

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையம் பகுதியில் உபரி நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் கால்வாய் முழுவதும் ஆள் உயரத்திற்கு மேல் சம்புகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக உபரிநீர் கால்வாய் வழியாக நீர் செல்ல முடியாமல் உள்ளது. மழை காலங்களில் மழைநீரும் செல்ல முடியாமல் தேங்கி ஊருக்குள் புகுந்து வீடுகளுக்குள் மழைநீர் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து குளத்துப்பாளையம் பகுதியில் உபரிநீர் கால்வாயில் முளைத்துள்ள சம்பு மற்றும் பல்வேறு செடி, கொடிகளை அகற்றி மழை நீர் ஊருக்குள் புகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான நிலையில் உள்ள மின் மோட்டார் அறை

கரூர் மாவட்டம், புங்கோடை குளத்துப்பாளையத்திலிருந்து வேட்டமங்கலம் செல்லும் தார் சாலை ஓரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அதன் அருகில் மின் மோட்டார் அறை கட்டப்பட்டு அதனுள் சுவிட்ச் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்மோட்டார் அறை கட்டுப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அறை பழுதடைந்து துவாரம் ஏற்பட்டு எந்த நேரமும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கி பெரியார் நகரில் இருந்து கவுண்டன்புதூர் செல்வதற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. இந்நிலையில் தார்சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தார் சாலை நெடுகிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்களால் தொடரும் விபத்துகள்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர் காலனியில் இருந்து நெய்தலூருக்கு செல்லும் தார் சாலையில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் வாகன ஓட்டிகள் செல்லும் போது குறுக்கே சென்று வருகின்றது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி வந்து கடிப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story