தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சிதிலமடைந்த மேற்கூரை
திருச்சி திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி ஜெம்புகேஸ்வரர் கோவிலில் தற்போது நவராத்திரி விழாவை முன்னிட்டு மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மேடையில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் அருகில் நிகழ்ச்சியை கண்டுகளிப்பவர்கள் அமரும் மேற்கூரையின் ஒருபகுதி மிகவும் சிதிலமடைந்து மழைநீர் உட்புகும் நிலையில் காணப்படுவதோடு, மேற்கூரை மேலும் உடைந்து ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடனே அவ்விடத்தில் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
மின் விளக்கு அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கல்லுபட்டி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு எந்த ஒரு அறிவிப்பு பலகையோ, தெரு விளக்கு வசதியோ இல்லை. இதனால் கல்லுப்பட்டி இருள்சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தெருநாய்கள் தொல்லை
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள சாலையோரம் கூட்டமாக தெருநாய்கள் படுத்துக்கொண்டு இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால், அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்ப பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வடிகால் வசதி அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், தி௫வெறும்பூா பகுதியில் உள்ள தெற்கு விஸ்தரிப்பு, இந்தரா ந௧ர், மலைக்கேவில் தெற்கு ஆகிய பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் மழைக் காலங்களில் மழைநீர் செல்ல வழி இன்றி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிதிலமடைந்த அங்கன்வாடி மையம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி 1-வது வார்டு விடத்தலாம்பட்டி அங்கன்வாடி மையம் கட்டப்பட்ட பல ஆண்டுகள் ஆதனால் தற்போது சிதிலமடைந்த ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 40 குழந்தைகள் படித்து வருகின்றனர். கட்டிடத்தின் உள்ளே குழந்தைகள் இருக்கும்போது இடிந்து விழுந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.