தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
பெரம்பலூர் வெங்கடேசபுரம் வடக்கு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருவதினால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குண்டும், குழியுமான சாலை
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நுழையும் இடத்தில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதினால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ்களில் இருந்து இறங்குவதற்காக பயணிகள் பஸ் படிக்கட்டில் வந்து நிற்கும்போது, இந்த குண்டும், குழியுமான சாலையில் பஸ்கள் செல்லும்போது அவர்கள் நிலைதடுமாறு கீழே விழும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
காவிரி நீர் கொண்டுவரப்படுமா?
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வறட்சி மாவட்டமாக காணப்படுகிறது. எனவே பெரம்பலூருக்கு திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து வரத்து வாய்க்கால்கள் அமைத்து காவிரி தண்ணீர் கொண்டு வந்து நீர் நிலைகளை தூர்வாரி அவற்றில் நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
உரப்பற்றாக்குறையை போக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சின்ன வெங்காயம், மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயிர்கள் நன்கு வளர்வதற்கு தேவையாக யூரியா உரம் பற்றாக்குறையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பற்றாக்குறையாக நிலவும் யூரியா உரங்கள் போதிய அளவு விவசாயிகளுக்கு கிடைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பழுதடைந்த மின்மாற்றி
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் கிரீன் சிட்டி முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார மின்மாற்றி பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் அருகில் உள்ள மின்கம்பமும் சிதிலமடைந்துள்ளது. இப்பகுதி மக்களின் நலனை கருதி மின்வாரிய துறையினர் பழுதடைந்த மின் மாற்றி மற்றும் மின் கம்பத்தை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து புதிய மின்மாற்றி அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.