தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் பயணிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்திற்கு தனியார் மற்றும் நகர பஸ்கள் சரிவர வருவதில்லை. இலுப்பூருக்கு செல்லும் பஸ்கள் கா.சத்திரத்தில் முக்கண்ணாமலைப்பட்டி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். காலை மற்றும் இரவு நேரங்களில் சரிவர ஊருக்குள் பஸ்கள் வராததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பெரியகடை வீதியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமத்தில் இருந்து தொண்டைமான்ஊரணி விளக்கு சாலை வரை உள்ள 2 கிலோ மீட்டர் சிதிலமடைந்த சாலையினை புதிய தார் சாலையாக அமைத்து, 2 ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயன்படுத்த முடியாத நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் பஸ் நிழற்குடையில் தினந்தோறும் ஏதேனும் ஒரு விளம்பர பதாகை வைக்கப்பட்டு வருகிறது. இதனால் நிழற்குடை இருந்தும் பயணிகள் தினமும் வெயிலில் நின்று தான் பஸ் ஏறி செல்கின்றனர். இதையும் மீறி நிழற்குடையில் பயணிகள் அமர்ந்தால் அவர்களுக்கு பஸ் வருவது கூட தெரிவதில்லை. இதனால் நிழற்குடையை பயணிகள் யாரும் உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மாற்றப்படாத மின்கம்பம்
புதுக்கோட்டை நகராட்சி பாரதிநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.