தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பன்றிகள் தொல்லை
திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்கு உட்பட்ட உடையான்பட்டி, முல்லை நகர் மற்றும் ராணி மெய்யம்மை நகர் ஆகிய பகுதிகளில் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இப்பகுதி மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி அருகில் பள்ளி செயல்பட்டு வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பன்றிகளை கண்டு அச்சப்படுகின்றனர். இந்த பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள டி.ரங்கநாதபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கு மேல் ஆவதால் தற்போது தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்பட அபயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள் வெளியே செல்ல அச்சம்
திருச்சி மாவட்டம், முசிறி அய்யம்பாளையம் ஸ்டோர் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள காலி இடத்தில் முளைத்துள்ள செடி, கொடிகளால் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் வெளியே செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் அங்குள்ள சிறிய தொட்டிகளில் மழைநீர் தேங்கி இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சட்ட விரோத மது விற்பனை
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பிரம்பட்டி தெற்கு வி.கைகாட்டியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் பி.எஸ்.என்.எல். டவர் அருகில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தேசிய நேடுஞ்சாலையில் விபத்து நடக்க அதிகம் வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளலாம்.
புதிய மின்கம்பம் நட்டும் பலனில்லை
திருச்சி கே.கே.நகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நகர் 2-வது பிரதான சாலையின் ஓரத்தில் உள்ள சிதிலமடைந்த மின்கம்பத்தின் அருகே புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டு சுமார் 1 மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை சிதிலமடைந்த மின்கம்பத்தில் உள்ள மின் இணைப்புகளை புதிய மின்கம்பத்திற்கு மாற்றாமல் உள்ளனர். இதனால் புதிய மின்கம்பம் நட்டும் பயன் இல்லாமல் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படும் முன்பு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.