தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

நிறுத்தப்பட்ட நகர பஸ்சால் மக்கள் அவதி

அரியலூரில் இருந்து அரங்கோட்டை வரை நாகமங்கலம், பட்டகட்டாங்குறிச்சி, செங்குழி, தீயனூர், விக்கிரமங்கலம் வழியாக சென்ற நகர பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் இப்பகுதியிலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவமனை செல்லும் நோயளிகள் என அனைவரும் சுமார் 5 கிலோ மீட்டர் நாகமங்கலம் நடந்து வந்து பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட நகர பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குப்பைகள் கொட்டப்படும் கிணறு

அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம் நகராட்சி உட்பட்ட குமிளங்குழி கிராமம் புனித சவேரியார் தொடக்கப்பள்ளி அருகே பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சர்கார் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் தற்போது அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமாற்ற நிலையில் பயன்படுத்த முடியாமல் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

அரியலூர் பூக்காரத்தெரு மற்றும் நகரப்பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் தெருநாய்கள் குழந்தைகளை கடிக்க வருவதினால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம்

அரியலூரில் இருந்து அம்மாக்குளம் செல்லும் சாலையில் உள்ள அய்யப்பன் ஏரிக்கரை பகுதியில் சாலையில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் மின்கம்பம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை சாலையோரம் மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் இருந்து ஒரத்தூர் செல்லும் தார்சாலை மிகவும் சிதலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story