தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

காத்திருப்போர் அறை அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் அமருவதற்கான காத்திருப்போர் அறை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் அருகில் உள்ள மரத்தடிகளிலும், கட்டிட வளாகங்களிலும் அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காத்திருப்போர் அறை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உயர் மின் கோபுரவிளக்கு வேண்டும்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் உயர் மின் கோபுரவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் போதிய வெளிச்சம் இன்றி அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள் அவதி

அரியலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அரியலூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகளின் இருக்கைகள் சிதலமடைந்து காணப்படுவதுடன், பெரும்பாலான இடங்களில் இருக்கைகள் இல்லாமல் உள்ளது. இதனால் வயதானவர்கள், பெண்கள் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆகாய தாமரைகள் அகற்றப்படுமா?

அரியலூர் சித்தேரிக்கு சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் வரும் வகையில் வரத்துவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த வரத்து வாரிகளில் ஆகயத்தாமரைகள் அதிக அளவில் முளைத்துள்ளதால், மழை பெய்யும் போது மழைநீர் ஏரிக்கு வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வரத்து வாரியில் முளைத்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதி வேண்டும்

அரியலூர் வட்டம், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன்ஆத்தூர் கிராம பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் உடையார்ப்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம், கும்பகோணம் செல்ல அரியலூர் வந்துதான் செல்ல வேண்டும். இதனால் கூடுதல் செலவு மற்றும் நேர விரையம் ஏற்படுகிறது. எனவே அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு கல்லங்குறிச்சி, அயன்ஆத்தூர், ஆனந்தவாடி, இரும்புலிக்குறிச்சி வழியாக நேரடி பஸ் சேவை தொடங்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story