தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஆபத்தான பயணியர் நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்குத்தொண்டைமான் ஊரணி செல்லும் சாலையில் தெற்குத்தொண்டைமான் ஊரணி விளக்கு சாலையில் கட்டப்பட்டிருக்கும் பயணியர் நிழற்குடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் சுவர்களின் பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் காணப்படுகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த நிழற்குடையால் பொதுமக்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், குண்ணன்டார் கோவில் சரகம், குளத்தூர் தாலுகா மூட்டாம்பட்டி ஊராட்சியில் உள்ள சம்பா குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி, கட்டுமாவடி, அம்மாபட்டினம் ஆகிய பகுதிகளில் கிழக்கு கடற்கரை சாலைகளில் மாடுகள் உலா வருகிறது. மேலும் சாலைகளில் மாடுகள் கூட்டமாக உறங்குகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மாட்டின் மீது மோதி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார சீர்கேடு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி, எம்.ஜி.ஆர். நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் தெருவின் கடைசியில் உள்ள காட்டுப்பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றை பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள கண்ணங்குடியில் உள்ள அந்தோனியார் கோவிலில் இருந்து சற்று தூரத்தில் வலது புறமாக 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவர்கள் செல்வதற்கு போதுமான சாலை வசதி இல்லை. இதனால் மழைபெய்யும்போது அவர்கள் சேறும், சகதியுமான சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவிகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கடிக்க வரும் தெருநாய்கள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, வலையப்பட்டி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க பாய்வதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை கடிக்க வருவதால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story