தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

வடிகால் வசதி அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், வெளிபிரிங்கியம் கிராமத்தில் சிவன் கோவில் தெருவில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில், வழிவகை செய்யாமல் புதிதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரெயில் பாதை அமைக்க வேண்டும்

கும்பகோணம், ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தின் வழியாக சேலத்திற்கு ரெயில் பாதை அமைத்து ரெயில்கள் விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார் சாலை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தில் உள்ள கிழக்குத் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் .எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story