தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

குண்டும், குழியுமான தார்சாலை

திருச்சி ரெயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன. இந்த நிலையில் மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றனர். இவை மருத்துவமனை வளாகத்தில் உட்கார்ந்து சாப்பிடும் நோயாளிகளுக்கு பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றி வருகின்றன. மேலும் சில நாய்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு உடல் முழுவதும் காயங்களுடன் சுற்றித் திரிவதினால் நோயாளிகளுக்கு விரைவில் தொற்று நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி காந்தி மார்க்கெட் திருவெறும்பூர் செல்லும் சாலையில் மீன் மார்க்கெட் பகுதியில் சாலையின் இருபுறமும் சரக்கு ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளி அருகே மது விற்பனை

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தியங்கார்பேட்டை அருகே உள்ள பிள்ளாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அருகே 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிறுத்தப்பட்ட அரசு பஸ்

திருச்சியிலிருந்து முசிறி மற்றும் சேர்குடி வழியாக மாலை 5-க்கு மேட்டுப்பாளையம் வரைக்கும் அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது அந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டதால் இப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story