தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

எலும்பு கூடான மின்கம்பம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி எஸ்.பி.நகர் கருப்பண்ணசாமி கோவில் பிரிவு அருகில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து தற்போது மின்கம்பம் எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாரிமுத்து, அரவக்குறிச்சி.

சுகாதார வளாகம் கட்ட வேண்டும்

கரூர் மாவட்டம், முத்தனூரில்150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இதில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தனூர் பகுதியில் கட்டப்பட்டிருந்த பழைய சுகாதார வளாகம் 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் இடிந்து விட்டது. இதனால் சுகாதார வளாகம் இன்றி பெண்கள் அவதியுற்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முத்தனூரில் பெண்களுக்கான புதிய சுகாதார வளாகம் கட்டிக் கொடுத்து உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

ரம்யா, முத்தனூர்.


Next Story