தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

உடைந்த இருக்கைகள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள புதுப்பட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையில் அமைக்கப்பட்ட இருக்கைகள் தரம் இல்லாமல் இருந்த காரணத்தினால் உடைந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த நிழற்குடையை பயன்படுத்தும் முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் அமர முடியாமல் கால்கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கந்தர்வகோட்டை.

எரியாத தெருவிளக்குகள்

தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் கந்தர்வகோட்டை கடை வீதியின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் பொதுமக்கள் இருளில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் கந்தர்வகோட்டை அருகில் சுங்கச்சாவடி வைத்து வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த சாலையில் உள்ள மின் கம்பங்களில் உள்ள மின் விளக்கை சீரமைப்பது மற்றும் சாலையில் உள்ள குப்பைகளை அகற்றுவது, சாலைகளுக்கு உரிய எச்சரிக்கை வண்ணங்கள் தீட்டுவது போன்ற பணிகளை சுங்கச்சாவடியினர் கவனிப்பதில்லை. ஆகவே இந்த குறைகளை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கந்தர்வகோட்டை.


Next Story