தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
கரூர் மாவட்டம், வாங்கல் சாலையில் உள்ள அரசு காலனியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முன்பு அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சேகர், அரசு காலனி.
போக்குவரத்திற்கு இடையூறு
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஷாநகர் பஸ் நிறுத்தம் வளைவு பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் பெரிதும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மணிவேல், பள்ளப்பட்டி.