தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராம பஸ் நிலைத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர் செல்லும் சாலை மற்றும் திருச்சி செல்லும் சாலையோரத்தில் உள்ள வணிக கடைகளினால் இருப்புறமும் சுமார் 12 அடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, செட்டிக்குளம்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் 3 ரோடு அருகே அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சங்கீதா, பெரம்பலூர்.

வெறிபிடித்து காணப்படும் தெருநாய்கள்

பெரம்பலூர் நகரப் பகுதியில் விடுமுறை நாட்களில் திறந்தவெளியில் இறைச்சி கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இறைச்சிகள் விற்றபின் அதன் கழிவுகளை அங்கேயே சிலர் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அவற்றை தெரு நாய்கள் தின்றுவிட்டு வெறி பிடித்ததுபோல் காணப்படுகின்றன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

சரியான நேரத்தில்பஸ்சை இயக்க கோரிக்கை

பெரம்பலூர் பணிமனைக்கு உட்பட்ட 9பி பஸ் பகல் 11.30 மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் தற்போது அடிக்கடி சரிவர இயக்கப்படாததால் பழைய விராலிப்பட்டியிலிருந்து செல்லும் பொதுமக்கள் வெளியூர் செல்ல பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலகுரு, பெரம்பலூர்.


Next Story