தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

உடைந்து கிடக்கும் மதுபாட்டில்கள்

கரூர் மாவட்டம் திருக்காடுதுறை அருகே ஆலமரத்து மேடு பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உள்ள ஆலமரத்தடியில் சிலர் மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கேயே போட்டு உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் இந்த பாட்டில் கண்ணாடி துண்டுகள், பொதுமக்கள், கால்நடைகளின் கால்களில் குத்தி காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஆலமரத்து மேடு.

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

திண்டுக்கல்லில் இருந்து அரவக்குறிச்சி பள்ளப்பட்டி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் தடாகோவில் பஸ் நிறுத்தத்தில் நின்று தான் செல்கிறது. அதேபோல கரூரிலிருந்து அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக திண்டுக்கல் செல்லும் அனைத்து பஸ்களும் தடா கோவில் பஸ் நிறுத்தத்தில் நின்று தான் செல்கிறது. தடாகோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் வேலை விஷயமாக கரூர், அரவக்குறிச்சி செல்பவர்களும் மற்றும் பள்ளி, கல்லூரியில் செல்லும் மாணவ- மாணவிகளும் தடாகோவில் பஸ் நிறுத்தம் சென்று பஸ் பிடித்து செல்கின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இதுவரை பயணியர் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வெயில், மழையில் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செல்வி, தடாகோவில்.

பூட்டிக்கிடக்கும் நூலகம்

கரூர் மாவட்டம், மரவாப்பாளையம் சாலையோரத்தில் இப்பகுதி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த சில நாட்களாக பூட்டியே கிடப்பதினால் இப்பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இளக்கியா, மரவாப்பாளையம்.

எரியாத மின்விளக்குகள்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி-புங்கம்பாடி சர்வீஸ் சாலையோரத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பங்களில் பெரும்பாலானவை எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மணி, அரவக்குறிச்சி.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் நொய்யல் காவிரி ஆற்றங்கரையில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுடுகாட்டுக்கு செல்வதற்கும், காவிரி ஆற்றுக்குள் செல்வதற்கும் தார் சாலை அமைக்கப்பட்டது. தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையின் வழியாக இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செந்தில்குமார், நொய்யல்.


Next Story