தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

ஆபத்தான நிழற்குடை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையின் மீது அருகே உள்ள ஒரு மரம் சாய்ந்த நிலையிலும், மரக்கிளைகள் உடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனால் பயணிகள் நிழற்குடையும் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் பயணிகள் இந்த நிழற்குடையின் உள்ளே அமர்ந்திருக்கும்போது நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், து.களத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த குப்பைகள் மழைபெய்யும்போது தண்ணீரில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செடி-கொடிகள் அகற்றப்படுமா?

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சில இடங்களில் செடி-கொடிகள் அதிக அளவில் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் நடமாட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகம் திறந்தவெளியில் பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லவும், மழை பெய்யும்போது மழைநீர் செல்லவும் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story