தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குடிநீர் தட்டுப்பாடு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கூத்தங்குடி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கார்த்திக், கூத்தங்குடி.

பஸ் நிறுத்தத்தில் மது விற்பனை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வாரச்சந்தை பஸ் நிறுத்தத்தில் சிலர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், ஜெயங்கொண்டம்.

ஆபத்தான மின்மாற்றி

அரியலூர் தேரடி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் இப்பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதனை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பங்கள் முறிந்து மின்மாற்றி கீழே விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிவாஜி, அரியலூர்.

கடிக்க வரும் தெரு நாய்கள்

அரியலூர் பெரிய அரண்மனை தெரு பகுதியில் ஏராளமான பொது மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ- மாணவிகளையும் கடிக்க துரத்துவதால் அவர்கள் பெரிதும் அச்சத்தின் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சின்னசாமி, அரியலூர்.


Next Story