தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு பரமநகர் பகுதியில் இருந்து கடைவீதி செல்லும் தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், காய்கறிகள் கொண்டு செல்லும் விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெருமாள், வடகாடு பரமநகர்.

ஆபத்தான நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு அருகே உள்ள அனவயல் பஸ் நிறுத்தத்தில் பஸ் வரும் வரை பயணிகள் அமர்ந்து பஸ் ஏறி செல்ல வசதியாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

காசிநாதன், அனவயல்.

`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியாததால் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக பெண்கள் செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாமல் பழுதடைந்து இருந்த மின் விளக்கை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், திருவரங்குளம்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் காலை மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், மீமிசல்.


Next Story