தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

பாலத்தில் பள்ளம்

கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள பெரியார் நகருக்கு செல்லும் வழியில் சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து அதில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் யாரேனும் தவறி விழுந்து விடக்கூடாது என அப்பகுதி மக்கள் குச்சிகள் வைத்தும், கற்களை போட்டும், கட்டைகளை வைத்து, பள்ளத்தை மூடி வைத்துள்ளனர். இருப்பினும் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார சீர்கேடு

கரூர் -ஈரோடு சாலையில் காயத்ரி நகர் உள்ளிட்ட சில இடங்களில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குப்பைகளை சுத்தம் செய்து மீண்டும் அந்தப் பகுதிகளில் குப்பைகளை கொட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அள்ளப்படாத கழிவுபொருட்கள்

கரூர் தாந்தோன்றிமலை கோவிலில் இருந்து ராயனூர் வழியாக வரும் வழியில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் சுத்தம் செய்து அதன் அருகிலேயே குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்த கழிவுப்பொருட்கள் மீண்டும் கழிவுநீர்வாய்க்காலில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அகற்றப்படாத கழிவுகள்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பாலத்துறை வாய்க்காலில் அதிக அளவில் குப்பைக் கழிவுகள் தேங்கி இருந்ததால் இந்த வழியாக தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் கிடந்த கழிவுகளை அள்ளி சாலையோரம் வைத்துள்ளனர். இதனால் இந்த சாலை வழியாக செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story