தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

தற்காலிக கழிவறை ஏற்படுத்தப்படுமா?

அரியலூர் பழைய பஸ் நிலையத்தில் தற்போது பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான பயணிகள் வந்து பஸ் ஏறி பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் தற்காலிக கழிப்பறை ஏற்படுத்தி பயணிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

அரியலூர் வண்ணான் குட்டை- சிவன் கோவில் செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலைகளில் உள்ள பள்ளங்களில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஏரியில் கலக்கும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்- சிதம்பரம் சாலையில் அய்யனார் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளதுஉயகொண்டான் ஏரி. இந்த ஏரியில் சுற்றுப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏரியில், கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story