'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஆதனூரில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் தேங்கி நிற்கின்றது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூபன், அலங்காநல்லூர்.

சாலையில் தேங்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் பேரையூர்-வத்திராயிருப்பு சாலையில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த பகுதியில் கொசு அதிகரித்து உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினி,பேரையூர்.

பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் 23-வது வார்டு கீழகைலாசபுரம் 2-வது தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாய் உடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளியே செல்கிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த பாதாள சாக்கடையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், கீழகைலாசபுரம்.

நோய் பரவும் அபாயம்

மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டிடத்தின் பின் வாசலில் உள்ள பாதாள சாக்கடை கால்வாய் உடைந்து சுப்புராமன் தெரு முழுவதும் கழிவுநீர் செல்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த பாதாள சாக்கடை கால்வாயை அதிகாரிகள் சரிசெய்து சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும்.

அன்புமணி, மதிச்சியம்.

சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்

மதுரை மாவட்டம் செல்லூர் சுயராஜ்யபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இருக்கும் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் பெற்றோர் அச்சத்துடனே குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முரளி, செல்லூர்.


Related Tags :
Next Story