'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆண்டாவூரணியில் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இந்த சாலையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருவாடானை.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில இருந்து புதுவக்குடி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் அவ்வப்போது சிறு, சிறு பழுதுகளை சந்தித்து வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

குமார், பரமக்குடி.

குடிநீர் வசதி வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா எம்.எஸ்.புதுக்குடியிருப்பு பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ௨ஆழ்துளை கிணறில் மோட்டார் அமைத்து குடிநீர் தொட்டி கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எம்.எஸ்.புதுக்குடியிருப்பு.

அடிப்படை வசதி தேவை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காக்காதோப்பு மயானத்தில் சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மயானத்திற்கு வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த மயானத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவி, பரமக்குடி.

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் ஊராட்சி கோவில் மாரியூர் பகுதியிலிருந்து கடற்கரை செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிப்போர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சரிசெய்ய வேண்டும்.

அமிர்த பாண்டியன், சாத்தங்குடி.


Related Tags :
Next Story