'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்

விபத்து ஏற்படுத்தும் நாய்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை பயமுறுத்தி வருவதுடன் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பரமக்குடி.

சேதமடைந்த சாலை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு உயர்நிலைப்பள்ளி வழியாக பனைக்குளம், மேலசெல்வனூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கடலாடி.

தரம் உயர்த்தப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

அடிக்கடி ஏற்படும் மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது இதனால் இந்த கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஏற்படும் மின்தடையை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஹம்மது யாகுதீன், பொட்டகவயல்.

சுகாதார சீர்கேடு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா உப்பூர் கிழக்கு கடற்கரை சாலையில் மயானம் உள்ளது. இதன் அருகில் சில வணிக நிறுவனங்கள் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு உருவாகி உள்ளது. எனவே இந்த கழிவுகளை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.

போக்குவரத்து நெரிசல்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பகலில் கனரக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கீழக்கரை.


Related Tags :
Next Story