'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

வாகன ஓட்டிகள் அவதி

மதுரை எல்லீஸ்நகர் பைபாஸ் ரோடு பழங்காநத்தம் மேம்பாலம் ஏறும் இடத்தில் நான்கு திசைகளிலும் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை அமைத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றி, மதுரை.

போக்குவரத்து இடையூறு

மதுரை மாநகராட்சி மேல பொன்னகரம் மெயின் ரோடு 8-வது தெரு சந்திப்பு, 11, 12-வது தெரு இளந்தோப்பு, பாரதியார் ரோடு ஆகிய பகுதியில் மின்தடை அன்று வெட்டப்பட்ட மரக்கிளைகள் அகற்றப்படவில்லை. இதனால் வெட்டப்பட்ட மரக்கிளைகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. உடனடியாக மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி, மதுரை.

சாலையில் ஓடும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் ஆத்திகுளம் சக்தி மாரியம்மன் கோவில் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கசிந்து சாலையில் ஓடுகிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரகாசம், மதுரை.

நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை ரெயில் நிலையம் பஸ் நிறுத்தத்தில் சில பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் பள்ளி- கல்லூரி மாணவர்கள். வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், மதுரை.

எரியாத தெருவிளக்கு

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் மேற்கு 66-வது வார்டு கோச்சடை பகுதி அம்பலக்காரர் தெருவில் மின்விளக்கு இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதேபோல நேதாஜிரோடு பகுதியிலும் தெருவிளக்குகள் எரிவதில்லை. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம், மதுரை.


Related Tags :
Next Story