'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

தேங்கிய மழைநீர்

சிவகங்கை மாவட்ட நகர் பகுதியில் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ரெயில்வே பாலத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வாகனஓட்டிகள் இதனை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இந்த பாலத்தின் அடியில் மழைநீர தேங்காமல் தடுக்க வேண்டும்.

ஆன்டன் ஜோ, சிவகங்கை.

குடிநீரில் கழிவுநீர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கீழஉரணியில் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுத்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

சீனிவாசன், கீழஉரணி.

தார்ச்சாலை வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே செட்டிநாடு கிராமத்தில் உள்ள சாலைகள் மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே இந்த சாலையை தார்ச்சாலையாக மாற்றிதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோலையன், செட்டிநாடு.

எலும்புக்கூடான மின்கம்பம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் செல்லும் சாலையில் உள்ள பொதுகழிவறை எதிர்புறம் உள்ள மின் கம்பம் சேதமாகி எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் இது அமைந்துள்ள சாலையை கடக்க வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

சரவணன், கழனிவாசல்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சோமநாதமங்களம் குரூப் பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்துரு, காளையார்கோவில்.


Related Tags :
Next Story