'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கிடப்பில் கிடக்கும் பராமரிப்பு பணி
மதுரை 94-வது வார்டு எம்.எம்.சி.காலனி பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலையானது இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதனால் இந்தச்சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட அதிகாரிகள் தோண்டிய சாலையை சீரமைத்து பராமரிக்க வேண்டும்.
செந்தில், அவனியாபுரம்.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
மதுரை மூன்றுமாவடி மற்றும் அழகர் நகர் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை வசதி கிடையாது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலிலும் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
வன்னியபெருமாள், மூன்றுமாவடி.
குவியும் குப்பைகள்
மதுரை மாநகரில் ஞாயிற்றுக்கிழமைகளில் குப்பை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால் வீடு மற்றும் சாலைகளில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்த குப்பைகளை தினமும் அகற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
சிவா, மதுரை.
தோண்டப்பட்ட சாலை
மதுரை வில்லாபுரம் 86வது வார்டு வேலுபிள்ளை தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலையானது சரிசெய்யப்படாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும்.
கணேஷ், வில்லாபுரம்.
வாகனஓட்டிகள் சிரமம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே வில்லூர் கிராம மெயின் பஜார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
கோபால், கள்ளிக்குடி,