'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆங்காங்கே சேதமடைந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், திருவாடானை.
அடிப்படை வசதி வேண்டும்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, பயணிகள் இருக்கைகள் போன்றவை போதிய அளவில் இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்வர்தீன், ராமநாதபுரம்.
ரெயில்வே மேம்பாலம் வேண்டும்
ராமநாதபுரம் -ராமேசுவரம் இடைப்பட்ட உச்சிப்புளி பகுதி வழியாக தினமும் 10-க்கும் மேற்பட்ட முறை ரெயில்கள் செல்வதால் ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, உச்சிப்புளி.
தெருநாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பரமக்குடி.
பெயர் பலகை வேண்டும்
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மதுரை-திருச்சி சாலை பிரிவில் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலை பிரிவில் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணி, ராமநாதபுரம்.