'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

நிழற்குடை வேண்டும்

மதுரை கோரிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கர்ப்பிணிகள், முதியோர் அவதிப்படுகிறார்கள்.. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், கோரிப்பாளையம்.

நாய்கள் தொல்லை

அவனியாபுரம், திருப்பரங்குன்றம் சாலையில் அம்பேத்கர் சிலை அருகில் வெறிநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் இப்பகுதியினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இந்த நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அவனியாபுரம்.

செய்தி எதிரொலி

மதுரை மாவட்டம் 66-வது வார்டு கோச்சடை பகுதி காளை அம்பலக்காரர் தெருவில் மின்விளக்கு அமைப்பதற்கான செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. தற்போது அதன் பயனாக இப்பகுதியில் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் புகாரை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

ராஜன், கோச்சடை.

சுகாதார சீர்கேடு

மதுரை மாநகராட்சி அண்ணா பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது.. எனவே பஸ் நிலையம் அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலாஜி, மதுரை.

இ-சேவை மையம் மீண்டும் செயல்படுமா?

மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாவினிப்பட்டி ஊராட்சி பகுதியில் நீண்ட நாட்களாக அரசு இ-சேவை மையம் செயல்படாமல் பெயரளவில் மட்டும் பெயர் பலகையுடன் உள்ளது. இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் பட்டா மாறுதல் போன்ற அரசின் இணையதள சேவைக்கு பொதுமக்கள் மேலூர் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. எனவே அதிகாரிகள் அரசு இ-சேவை மையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவார்களா?

விஜய், நாவினிப்பட்டி


Related Tags :
Next Story