'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும் குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகுடி ஊராட்சி ஒன்றியம் விளத்தூர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விளத்தூர்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் பயணிகள் செல்லக்கூடிய நடைபாதையை சாலையோர வியாபாரிகள் சிலர் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் நடந்து செல்ல பாதையின்றி பயணிகள் அவதியடைகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்ராகிம், ராமநாதபுரம்.
வாகனஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து வேங்கிட்டன்குறிச்சி செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே நெஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
குமார், பரமக்குடி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை மகர்நோன்பு பொட்டல் ரோடு அய்யப்பன் கோவில் தெருவில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்வின், கேணிக்கரை.
அச்சுறுத்தும் நாய்கள்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி தொடக்கப்பள்ளி அருகில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன., இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் ஒருவித பயத்துடன் செல்கின்றனர். எனவே அச்சுறுத்தும் இந்த நாய்களை பிடத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
முத்து கிருஷ்ணன், சனவேலி.