'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத தெருவிளக்குகள்
மதுரை மாவட்டம் பொன்மேனி மாடக்குளம் மெயின் ரோடு வாகேஸ்வரி இரண்டாவது தெருவில் சில இடங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் எரியாத தெருவிளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சுரேஷ் கண்ணன், மாடக்குளம்.
குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
மதுரை மாநகராட்சி 4-வது வார்டு சி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் சந்து பாலரங்காபுரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் தரமான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூர்த்தி, பாலரங்காபுரம், மதுரை.
சாலை ஆக்கிரமிப்பு
மதுரை மாவட்டம் மேலச்சின்னம்பட்டி ஊராட்சி எல்லப்பட்டி கிராமத்தில் இருந்து வடக்கில் ஆறு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் செல்ல முடியாமல் இந்த பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
தனபாண்டியன், எல்லப்பட்டி,
சாலை வசதி வேண்டும்
மதுரை மாவட்டம் ஒய்.புதுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருங்காலக்குடி விரிவாக்கம் செம்மொழி நகர் பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திரு, மதுரை.
தெருநாய்கள் தொல்லை
மதுரை மாநகராட்சி 56-வது வார்டு மேல அனுப்பானடி தெற்கு மெயின் ரோடு பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஜான்சன், மேல அனுப்பானடி.
தெருவிளக்கு வசதி தேவை
மதுரை மாநகராட்சி 2-வது வார்டில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதன் காரணமாக சாலை இருள் சூழந்து காணப்படுவதால் இரவு ேநரங்களில் அப்பகுதியில் செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ப.முத்துகாமாட்சி, திருவாலவாயநல்லூர்.
நடவடிக்கை தேவை
மதுரை மாவட்டம் ஆனையூர் முத்தாலம்மன் நகர் சாலையில் சிலர் போக்குவரத்திற்கு இடையூறாக ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வருவார்களா?.
பொதுமக்கள், முத்தாலம்மன் நகர்.
ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் வேண்டும்
மதுரை மாவட்டம் கீழகைலாசபுரம் தாகூர் நகர் கண்மாய்கரை பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு உள்ள ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் ரேஷன் கடை வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
விளையாட்டு மைதானம் தேவை
மதுரை மாவட்டம் விராதனூர் ஊராட்சியில் விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
பூ.சிவசீலன், விராதனூர்.
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோடு கோச்சடை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், முதியோர்கள் வெயிலிலும் மழையிலும் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்து பயணிகளின் சிரமத்தை போக்க வேண்டும்.
ராஜன், கோச்சடை