'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும் குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதிக்குட்பட்ட சந்தைபேட்டை சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், பண்ணவயல்.
தெருநாய்கள் தொல்லை
ராமநாதபுரம் நகர் வனசங்கரியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் நடமாட முடியாதபடி துரத்துக்கின்றன. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி, ராமநாதபுரம்.
விளையாட்டு மைதானம் வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு காந்திநகர் பகுதியில் இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் பிராதன விளையாட்டு கபடியாகும். ஆனால் இங்கு விளையாட்டு மைதானம் இல்லை. எனவே இந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுல்தான் செய்யது, திருப்பாைலக்குடி.
நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் நகரில் உழவர் சந்தை அருகில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி ஓராண்டுக்கும் மேலாக பயன்பாடின்றி பூட்டப்பட்டு உள்ளது. திறந்து சில நாட்கள் மட்டுமே செயல்பட்ட இந்த அங்காடியை நகராட்சி நிர்வாகம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
தொழிலாளர்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா முக்கந்தர் பஸ் நிறுத்தத்திலிருந்து டி.கிருஷ்ணாபுரம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலை வழியாக உப்பு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த சாலையில் பயணிப்பதால் கால தாமதம் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகவேல், சேரந்தை.