'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் 35-வது வார்டு பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.. மேலும் இந்த நாய்களின் குட்டிகள் விபத்துக்குள்ளாகி ஆங்காங்கே இறந்தும் கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை அப்பறப்படுத்துவதுடன் அவற்றிற்கு கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ராமநாதபுரம் நகர் 2-வது வார்டு கோழிகாட்டு தெருவில் உள்ள பொதுபாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ராஜேந்திரன், ராமநாதபுரம்.
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகேஷ், கீழக்கரை
பொதுமக்கள் சிரமம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதி தெருக்களில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்ள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாசர் அராபத், திருப்பாலைக்குடி.