'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?
ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள தலைமை தபால் நிலையம் பின்புறம் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் குப்பைகளையும் காய்கறி கழிவுகளையும் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், ராமநாதபுரம்,
குண்டும் குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி பகுதியில் பலன்கோட்டை தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண், திருப்பாலைக்குடி,
கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. கிராமப்புற பகுதியில் சில இடங்களில் சாலையில் வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், பரமக்குடி,
நாய்கள் தொல்லை
ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சமீபகாலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்கள் துரத்துவதால் சிலர் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் தெருநாய்களால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலா, ராமநாதபுரம்
போக்குவரத்து நெரிசல்
ராமநாதபுரம் நகர் பகுதியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், ராமநாதபுரம்