'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடவடிக்கை தேவை
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சிறிய மழை பெய்தால் கூட தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீரில் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி தாழ்வான பகுதிகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குணசேகரன், மதுரை.
பராமரிப்பற்ற குளியல் தொட்டி
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி ஊராட்சி அண்ணா தெருவில் குளியல்தொட்டி கட்டப்பட்டது.. இந்த குளியல் தொட்டி முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விளாச்சேரி.
ஒளிராத தெருவிளக்கு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களும் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக தெருவிளக்குகள் மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கப்பாண்டி, அழகாபுரி.
பயணிகள் அவதி
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வாடிப்பட்டி வழியாக குலசேகரன்கோட்டை விராலிப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டது.இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?
கவுரிநாதன், தென்கரை.
நாய்கள் தொல்லை
மதுரை ெஜய்ஹிந்த்புரம் பகுதியில் நாய்களின் ெதால்ைல அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். காலை ேநரங்களில் மாணவர்களை துரத்துவதால் அச்சத்துடன் அவர்கள் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், மதுரை.