பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
புகாா் பெட்டி
புகையால் மாணவர்கள் அவதி
46 புதூர் நொச்சிக்காட்டு வலசு கம்பன் நகர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடம் அருகே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் இந்த குப்பையில் சிலர் தீ வைத்துவிடுகின்றனர். இதனால் குப்பையில் இருந்து கரும்புகை எழும்பி அந்த பகுதியில் பரவுகிறது. இதன்காரணமாக பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதுடன், மூச்சு திணறலும் ஏற்படுகிறது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம் பொன்சங்கர், கம்பன் நகர்.
குவிந்து கிடக்கும் குப்பை
கோபி மேட்டுவளவில் கமலா ரைஸ் மில் நான்காவது வீதியில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
பழுதடைந்த ரோடு
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே ரோடு பழுதடைந்து அதில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பழுதடைந்து காணப்படும் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குடிநீர் கிடைக்குமா?
அந்தியூர் பேரூராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டில் கடந்த 13 நாட்களாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அந்தியூர்.
பயன்பாட்டுக்கு வருமா?
ஈரோடு பூம்புகார் நகர் பகுதியில் சமுதாயக்கூடம் ஒன்று உள்ளது. ஆனால் இந்த சமுதாயக்கூடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் சமுதாயக்கூடத்தின் முன்பகுதியில் செடிகள் வளர்ந்தும், புதர்மண்டியும் காணப்படுகிறது. இந்த சமுதாயக்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பூம்புகார் நகர்.
குப்பையை அகற்ற வேண்டும்
ஈரோடு வாய்க்கால் மேடு பாப்பான்காடு முதல் வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு வெளியே போடப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அகற்றப்படவில்லை. இதன்காரணமாக கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.