பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி பகுதி
தினத்தந்தி புகாா் பெட்டி
வெளியேறும் கழிவுநீர்
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு முன்புறம் உள்ள தெருவில் பாதாள சாக்கடை உடைந்து அதில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் வீதியில் நடமாட முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதியில் நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
மாற்றுப்பாதை அமைக்கப்படுமா?
அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்காக அந்த பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே பாலம் கட்டும் பணி முடியும் வரை மாற்றுப்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அந்தியூர்.
சாய்ந்த மின்கம்பம்
கோபி அருகே உள்ள வேலுமணி நகர் பகுதியில் தபால் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே உள்ள மின் கம்பம் சாய்ந்தபடி உள்ளது. மேலும் இந்த மின் கம்பத்தில் அதிக அளவில் ஒயர்கள் பின்னி பிணைந்து உள்ளது. காற்று வீசினால் மின் கம்பம் சாய்ந்து விழுந்து மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாய்ந்தபடி காணப்படும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ஈரோடு எல்லப்பாளையம் செல்லும் ரோட்டில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. மேலும் காற்று வீசும்போது குப்பையில் இருந்து தூசுகள் பறந்து சென்று அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. மேலும் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
வீணாகும் குடிநீர்
ஈரோட்டில் அண்ணா தியேட்டர் அருகில் உள்்்்்ள தண்ணீர் குழாயில் உடைப்பு உள்ளது. இதனால் அதில் இருந்து குடிநீர் வெளியேறி ரோட்டில் வீணாக செல்கிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ஈரோடு.
போக்குவரத்துக்கு இடையூறு
அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு ரோட்டில் இருபுறமும் முள் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. பொதுமக்கள் நலன் கருதி ரோட்டில் வளர்ந்துள்ள முள் செடிகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வெள்ளித்திருப்பூா்
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
நஞ்சை கோபி தொட்டிபாளையத்தில் குழந்தைகள் திடல் உள்ளது. இந்த திடலை ஆக்கிரமித்து செடிகள் வளர்ந்து உள்ளன. மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் விளையாட்டு திடலை குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே குழந்தைகள் விளையாட்டு திடலை ஆக்கிரமித்து உள்ள செடிகள் மற்றும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.