தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாகும் குடிநீர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இருந்து குருவித்துறை செல்லும் சாலையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் குடிநீர் வீணாகி செல்கிறது. மேலும் குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சாலையை சேதப்படுத்துகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுரிநாதன், சோழவந்தான்.
பழுதான சாலை
மதுரை அவனியாபுரம் ஜே.பி. நகர் 1-வது குறுக்குத் தெருவில் உள்ள சாலை பழுதாகி உள்ளதால் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-பொதுமக்கள், அவனியாபுரம்.
விபத்து அபாயம்
மதுரை மாநகராட்சி 39-வது வார்டு சதாசிவ நகரின் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும் இந்த மாடுகளால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
செந்தில்குமார், மதுரை.
வாருகால் வசதி தேவை
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கொம்பாடி ஊராட்சி மேலத்தெருவில் சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் போதிய வாருகால் வசதி இல்லாததால் மழைக்காலங்களில் மழைநீரானது வீடுகளுக்குள் செல்கிறது. எனவே இப்பகுதியில் முறையான வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராம்குமார், கொம்பாடி, மதுரை.
பயணிகள் அவதி
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் கூட்டம்கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்திற்குள் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், மதுரை.