தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

நாய்கள் தொல்லை

மதுரை மாநகராட்சி உத்தங்குடி, ஆதிஈஸ்வரா நகர் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், மதுரை.

சாலையை விரிவுபடுத்த வேண்டும்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புதுப்பட்டியில் இருந்து அழகாபுரி, கீழக்கரை, பெரிய இலந்தைகுளம் வழியாக கல்வேலிபட்டி வரையில் உள்ள ஒருவழி பாதையை இரு வழி பாதையாக விரிவுபடுத்த வேண்டும். இதனால் இப்பகுதியில் வாகனஓட்டிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முடியும். எனவே சாலையை விரிவுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண், புதுப்பட்டி.

வாகனஓட்டிகள் சிரமம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பாறைப்பட்டி அருகில் என்.எச்.208 தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறுவதால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். எனவே பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதன், மதுரை.

நிழற்குடை அமைத்து தருவார்களா?

மதுரை மாநகராட்சி 66-வது வார்டு மேலக்கால் மெயின் ரோட்டில் கோச்சடை பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். மழை, வெயில்காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயணிகள் நிழற்குடை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.எனவே இருக்கை வசதிகளுடன் கூடிய நிழற்குடைகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, மதுரை.

பொதுமக்கள் அவதி

மதுரை பழங்காநத்தம் கண்ணதாசன் தெரு, வடக்கு தெரு போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் செல்கிறது. மேலும் கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள், மதுரை.


Next Story