தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடவடிக்கை எடுக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் மக்கும், மக்காத குப்பைகளை தனிதனியே பிரித்தெடுக்க குப்பை தொட்டிகள் உள்ளன. ஆனால் ஒருசில கிராமங்களில் உள்ள குப்பை தொட்டிகள் பயனற்று காணப்படுகிறது. இதனை பயன்படும் பகுதியில் வைத்து சுகாதாரத்தை மேம்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னுச்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஒளிராத தெருவிளக்கு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பெரியகடை வீதி, கவிமணி தேசியவிநாயகர் வடக்குதெரு, ஆஸ்பத்திரி அருகில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் இப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டீபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.
கட்டிடம் சீரமைக்கப்படுமா?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் 24-வது வார்டு தெற்குரத வீதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.கட்டிடத்தின் முன்பகுதியில் சுவற்றின் அடிப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அருகில் உள்ள தடுப்புசுவரும் சேதமடைந்து உள்ளது. ஏராளமான குழந்தைகள் தினசரி வந்து செல்வதால் கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், சாத்தூர்.
தொல்லை தரும் நாய்கள்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியல் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், காரியாபட்டி.
சேதமடைந்த சாலை
விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகே கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிறு, சிறு காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், சாத்தூர்.