தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரண்மனை சாலையிலிருந்து 13-வது தெரு வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகன், திருவாடானை.
ஆபத்தான மின்கம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலாய்க்குடியில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்னர் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகமூர்த்தி, மேலாய்க்குடி.
தினமும் பஸ்சை இயக்க வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சேரந்தை கிராமத்திற்கு 10-ம் எண் பஸ் மட்டுமே வருகிறது. இந்த பஸ் வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்குவது இல்லை. இதனால் இந்த ஊரில் உள்ள மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பஸ்சை தினமும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சண்முகவேல், சேரந்தை.
சேதமடைந்த மின்கம்பம்
ராமநாதபுரம் பாரதிநகர் கக்கன்கரையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணகுமார், ராமநாதபுரம்.
எரியாத தெருவிளக்கு
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சேதுக்கரையில் கடலில் முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுக்க வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். ஆனால் கடற்கரை அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனோகரன், திருப்புல்லாணி.