தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் தளிர்மருங்கூரில் இருந்து பாகனவயல் செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலா, பாகனவயல்.

குடிநீர் தட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 36-வது வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இப்பகுதி மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி வருகின்றனர். எனவே சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனலட்சுமி, கணேசபுரம்.

மின்சாரம் துண்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட சடைமுனியன்வலசை கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இதனால் இப்பகுதி மக்களின் தொழில்வளங்கள் பாதிக்கப்படுகின்றது. எனவே தடையற்ற மின்சாரம் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், சடைமுனியன்வலசை.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மதுரை மாவட்டம் மணி நகரம் கர்டர் பாலம் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் கசிந்து சாலையில் வெளியேறி வருகிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை உருவாக்கியுள்ளது.. எனவே பாதாள சாக்கடையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றி, மதுரை.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் கடந்த சில தினங்களாக எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. திடீர் மின்தடையால் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்ற எலக்ட்ரிக் சாதனங்கள் அடிக்கடி பழுதாகின்றது. எனவே இந்த பகுதியில் முன்அறிவிப்பின்றி மின்சாரம் துண்டிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சந்தனகுமார், தம்பிபட்டி.

எரியாத தெருவிளக்கு

மதுரை மாவட்டம் சர்வேயர் காலனி பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இந்த இருளை பயன்படுத்தி வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே எரியாத தெருவிளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துைற அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

ஜெய்கணேஷ், மதுரை.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. பயணிகள் வெயிலில் நீண்ட நேரம் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெயரூபன், மதுரை.

சேதமடைந்த மின்கம்பம்

விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூர் கண்மாய் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து எப்போது கீழே விழும் என்ற நிலையில் உள்ளது.. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்ணன், விருதுநகர்.

நிறைவடையாத சாலை பணி

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் 5,6,7- வது தெருக்களில் ஜல்லி கற்களை கொட்டி புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பல நாட்களாகியும் தற்போது வரை இந்த பணி நிறைவடையாமல் உள்ளது. இதனால் சாலையில் நடக்க, பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வகுமார், மதுரை.தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாகனஓட்டிகள் அவதி

மதுரை மாவட்டம் கூடல்புதூர் பகுதிக்குட்பட்ட அன்புநகர், மருதம் தெருவில் உள்ள சாலை குண்டும்-குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மகேந்திரன், மதுரை.


Next Story