தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் கே.வாகைகுளம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறப்பு விழா காணப்படாமல் உள்ளது. ஏற்கனவே உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை விரைவாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அந்த பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கே.வாகைகுளம்.

சேதமடைந்த பள்ளி கட்டிடம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா குடிபுதூரில் உள்ள ஊராட்சிமன்ற பள்ளி கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு பக்கவாட்டு சுவர், செங்கல் பெயர்ந்து உள்ளது. மேலும் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடடிக்கை எடுப்பார்களா?

ெபரியசாமி, ஸ்ரீவில்லிபுத்தூா்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

விருதுநகர் அல்லம்பட்டி காமராஜர் பைபாஸ் சாலையில் லேசாக மழை பெய்தால் கூட பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் சாலையில் வெளியேறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தேங்கிய கழிவுநீரில் பயணிப்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

மாடுகள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

சுமதி கவியரசன், ராஜபாளையம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு காலை நேரத்தில் போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் மாணவர்கள் காலை நேரத்தில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே மேற்கண்ட வழித்தடத்தில் காலை நேரத்தில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.

கவிதா, வத்திராயிருப்பு.


Next Story