தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

சாலை வசதி தேவை

விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலம்மாள் நகரில் சாலை வசதி இல்லை. லேசாக மழை பெய்தால் கூட அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்தப்பகுதியில் மின்வயர்களும் தாழ்வாக செல்கின்றன. இதனால் விபரீதம் எதுவும் நேர வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்வயர்களை சரி செய்வதுடன், சாலை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பாலம்மாள்நகர்.

கண்மாயில் கலக்கும் கழிவுநீர்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாயில் கழிவு நீர் கலப்பதோடு குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதன் எதிரே தான் பள்ளியும் உள்ளது. மேலும் பிரதான சாலையிலேயே குப்பைகளும் அகற்றப்படாமல் கிடப்பதால் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதோடு கண்மாயில் கழிவுநீர் கலக்காத வண்ணம் தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

பொதுமக்கள், சத்திரப்பட்டி.

வாசகர்கள் அவதி

விருதுநகர் மாவட்ட மைய நூலகத்திற்கு அருகே அடிக்கடி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடக்கிறது. இதனால் இந்த நூலகத்திற்கு வரும் வாசகர்கள், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் போராட்டம் நடத்தாமல் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, விருதுநகர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் ெதால்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நளினி, தளவாய்புரம்.

போக்குவரத்து பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் மாடுகள் ஆங்காங்கே படுத்துக்கிடக்கின்றன. இதனால் ேபாக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுமதி கவியரசன், காரியாபட்டி.


Next Story