தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை சீரமைக்கப்படுமா?
விருதுநகர் அருகே உள்ள பொட்டல்பட்டியில் தார்ச்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். குண்டும், குழியுமான சாலையால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
பொதுமக்கள், பொட்டல்பட்டி.
நோயாளிகள் சிரமம்
விருதுநகர் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்தகமானது இரவு நேரங்களில் செயல்படுவது கிடையாது. இதனால் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயச்சந்திரன், விருதுநகர்.
மின்தடை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் தெரு பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி நடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், சங்கரபாண்டியபுரம்.
ஆக்கிரமிப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் இப்பகுதியில் நீர் தட்டுப்பாடு நிலவும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றிட வேண்டும்.
பொதுமக்கள், சாத்தூர்.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், ஸ்ரீவில்லிபுத்தூர்.