தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

தொற்றுநோய் பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகே மாடர்ன் நகரில் மழை பெய்தால் வடிந்து செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் மழைநீரானது தேங்கி நின்று கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாக வழிவகுக்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுவதால் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் 2-வது வார்டு பள்ளிவாசல் மெயின் தெருவில் குடிநீர்குழாய் தாழ்வான நிலையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் மழை பெய்தால் நீரானது தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் எடுக்க வரும் பெண்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குழாய் அமைப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து, தம்பிபட்டி.

தடுப்பணை வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகர் பகுதி குடியிருப்புகளில் இருந்து பெறப்படும் குப்பைகள், தெருவோரங்களில் அள்ளப்படும் குப்பைகள் ஆகியவற்றை அங்குள்ள கவுசிகா நதியில் கொட்டுகிறார்கள். மேலும் மழைபெய்தால் நீரை தேக்க இந்த ஆற்றில் தடுப்பணை வசதி கிடையாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து தடுப்பணை கட்ட வேண்டும்.

திருப்பதிராஜன், விருதுநகர்.

சேதமடைந்த மின்கம்பம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளப்பட்டி கிராமம் சாமிபுரம் காலனி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் தெருவில் குழந்தைகள், பெரியவர்கள் தெருவில் நடமாட அச்சப்படுகிறார்கள். மழை பெய்தால் அவ்வப்போது மின்கசிவும் இந்த கம்பத்தில் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.

முருகன், பள்ளப்பட்டி.

பொதுமக்கள் அச்சம்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி அருகே எத்திலப்பன்பட்டி கிராமத்தில் உள்ள நீர்தேக்க தொட்டியின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த தொட்டி உள்ள பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான நீர்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், தம்மநாயக்கன்பட்டி.


Next Story