தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

ஆக்கிரமிப்பு

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை அணையை ஆகாயத்தாமரை செடிகள் முற்றிலுமாக ஆக்கிரமித்து உள்ளன. மேலும் கரையோர பகுதிகளில் கருவேலமரங்கள் வளர்ந்து தண்ணீரை உறிஞ்சி வருகின்றன. அணையின் வளாகத்தில் சிறுவர் பூங்கா இருந்ததற்கான சுவடின்றி உள்ளது. சிறுவர் பூங்காவினை சீரமைப்பதுடன் அணையினை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை செடிகள், கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் டி.டி.கே. சாலையில் தார் சாலையின் உயரத்திற்கு ஏற்ப பாதாள சாக்கடை மூடியினை உயர்த்தி அமைக்காததால் அந்த பகுதி மட்டும் பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்தப்பள்ளத்தில் வாகனத்தை இறக்கி ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே சாலையின் உயரத்திற்கு ஏற்ப பாதாள சாக்கடை மூடியினையும் உயர்த்தி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், விருதுநகர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி 16-வது வார்டு திருத்தங்கல் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளது. கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சேதமடைந்த கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மலிங்கம், சிவகாசி.

குடிநீர் தட்டுப்பாடு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா டி.கன்சாபுரம் கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்து பல நாட்கள் ஆகிறது. அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். வினியோகிக்கப்படும் நீரும் உப்பு நீராக உள்ளது. கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியும் பழுதாகி நீர் ஏற்ற முடியாத நிலையில் உள்ளது. எனவே இப்பகுதியில் நீர்தேக்க தொட்டியை சரிசெய்து சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், டி.கன்சாபுரம்.

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. ஆதலால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

ஸ்ரீராம், சாத்தூர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-


Next Story