தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

சுகாதார வளாகம் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையத்தில் இலவச கழிவறை வசதி இல்லாததால் பயணிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இலவச சுகாதார வளாகத்தை அமைத்து பயணிகளின் சிரமத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர், சிவகாசி.

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பழமையான ஜட்கா பாலத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது புதிய பாலம் பயன்பாட்டில் உள்ள நிலையில் இதனையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர், சாத்தூர்.

சேதமடைந்த சுற்றுச்சுவர்

விருதுநகர் மாவட்டம் மருதநத்தம்‌ கிராமத்தில் உள்ள ஊருணி சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் ஊருணியில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சுவரை சீரமைத்து ஊருணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெய்சங்கர், மருதநத்தம்.

கூடுதல் இருக்கை தேவை

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவில் இருக்கை வசதி குறைந்த அளவில் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அதிக நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, விருதுநகர்.

ெபாதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் வாருகால் வசதி கிடையாது. இதனால் மழைபெய்தால் கழிவுநீரானது சாலை வழியாக கிராம கண்மாயில் கலக்கிறது. ஆதலால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-யில் வாருகால் வசதி அமைத்து கண்மாயை தூர்வார வேண்டும்.

மாரிமுத்து, தம்பிபட்டி.


Next Story