தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றி திரிகின்றன. இதனால் சாலையில் நடமாட பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வாகனஓட்டிகளை இவை துரத்தி சென்று கடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

அயாஸ், சத்திரரெட்டியபட்டி.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

அன்பு, குல்லூர்சந்தை.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வாகனங்களின் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவுநேரங்களில் வாகனஓட்டிகள் அவ்வப்போது இந்த தடுப்பில் மோதி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாந்தகுமார், அருப்புக்கோட்டை.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் - ஸ்ரீவில்லிபுத்தூர் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கூட்ட நெரிசல் காரணமாக ஆபத்தானமுறையில் பயணிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

விவேகானந்தன், கிருஷ்ணன்கோவில்.

குடிநீர் தட்டுப்பாடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர்-செட்டியார்பட்டி சாலையில் தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் சாலையில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குழாயானது சேதமடைந்து நீரானது வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சரிசெய்ய வேண்டும்.

சரவணகுமார், சேத்தூர்.

நூலகம் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே எஸ்.ராமசந்திராபுரம் கிராமத்தில் குடிநீர், தார்ச்சாலை போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் இல்லை. மேலும் இந்த கிராமத்தில் நூலகவசதியும் கிடையாது. இதனால் இப்பகுதி மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயசீலன், எஸ். ராமசந்திராபுரம்.

சுகாதார சீர்கேடு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயாண்டிபட்டி தெருவில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி கிடையாது. இதனால் இந்த சாலையில் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப்பகுதியில் வாருகால் அமைக்க வேண்டும்.

அன்புசெல்வன், ஸ்ரீவில்லிபுத்தூர்.

விபத்து அபாயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மண்குண்டாம்பட்டி முக்குரோட்டில் இருந்து சாத்தூருக்கு செல்லும் சாலை அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால் இந்த சாலையில் நடமாட முடியாமல் இப்பகுதி மக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் விபத்துகள் இனி நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருநாதன், சாத்தூா்.

குவிந்து கிடக்கும் குப்பை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டி தனியார் பள்ளி அமைந்துள்ள சாலையில் குப்பைத்தொட்டி கிடையாது. இதனால் சாலையில் குப்பையானது மலைபோல் குவிக்கப்படுகிறது. தேங்கிய குப்பைகளால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். துர்நாற்றத்தாலும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு குவிக்கப்படும் குப்பைகளை அகற்றி இங்கு குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.

முத்துமாரி, மலையடிப்பட்டி.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சிவகாசி.



Next Story