தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ்வசதி
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணன், ஆலங்குளம்.
தெருவிளக்கு தேவை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சில மாதங்களுக்கு முன்பாக சர்ச் சந்திப்பில் சாலை அகலப்படுத்தப்பட்டது. அப்பொழுது சில இடங்களில் இருந்து மின் கம்பங்களை அகற்றினர். அதன்பிறகு மீண்டும் அமைக்கப்படவில்லை அதனால் கிளைச்சிறை, பொதுபணித்துறை அலுவலகம் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் மின்கம்பம் அமைத்து மீண்டும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
தண்ணீர் பற்றாக்குறை
விருதுநகர் மாவட்டம் செட்டியார்பட்டி 9-வது வார்டு பாலவிநாயகர் கோவில் தெரு, பூமாரியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள சின்டெக்ஸ் தொட்டியிலிருந்து நான்கு தெருக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் உள்ள மோட்டார் அடிக்கடி பழுதாவதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் போர்வெல் அமைத்து தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டும்.
பொதுமக்கள், செட்டியார்பட்டி.
வீணாகும் குடிநீர்
விருதுநகர் மாவட்டம் மெட்டுக்குண்டு ஊராட்சி அரசகுடும்பன்பட்டி கிராமத்தில் உள்ள தெருகுழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. மேலும் தண்ணீர் குழாய் கீழேயும் உடைந்து கசிவு ஏற்பட்டு மண் கலந்து வருகிறது. எனவே தண்ணீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர், மெட்டுக்குண்டு.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
விருதுநகர் யூனியன் பெரிய மருளுத்து அருகே உள்ள வாய்ப்பூட்டான்பட்டியில் கழிவுநீர் வாருகால் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் நோய் பரவும் அபாய நிலையும் உருவாகி உள்ளது. எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா? வேல்முருகன், விருதுநகர்.
மாணவர்கள் அவதி
விருதுநகர் வட்டம் இனாம்ரெட்டியப்பட்டி கிராமத்திலிருந்து விருதுநகர் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பரத், இனாம்ரெட்டியப்பட்டி.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மேல தெரு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகத்திற்கு வரும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயச்சந்திரன், விருதுநகர்.
வாருகால் வசதி வேண்டும்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா இந்திரா காலனி பகுதியில் போதிய அளவு வாருகால் வசதி இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்குகிறது. எனவே இந்த பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகாசி.
சீரான மின்சாரம்
விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் பஞ்சாயத்து டி.கிருஷ்ணாபுரம் பகுதியில் குறைந்த மின்னழுத்த குறைபாடு காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இதனால் மின்சாதன பொருட்களும் அடிக்கடி பழுதாகின்றன. எனவே இந்த பகுதி மக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், டி.கிருஷ்ணாபுரம்.
சேதமடைந்த சுவர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-தூர் கடலைகார தெருவிலிருந்து துடியாண்டி அம்மன் கோவில் தெருவை இணைக்கும் ஓடைப்பாலத்தில் கைப்பிடி சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த ஓடைப்பாலத்தை அதிக மக்கள் பயன்படுத்தி வருவதால் ஓடையில் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடைக்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.