தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

தேங்கி கிடக்கும் குப்பை

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் தெருவில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்தும், மரக்கிளைகள் உரசியபடியும் காணப்படுகிறது. பல சாலைகள் மண் ரோடாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் குப்பைகள் தேங்கி உள்ளது. மேலும் இந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோயை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துரைபாண்டி, கிருஷ்ணன்கோவில்.

எச்சரிக்கை பலகை தேவை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அதிக அளவில் வேகத்தடை உள்ளது. ஆனால் இதன் அருகில் எவ்வித எச்சரிக்கை பலகையும், எச்சரிக்கை கோடும் இல்லை. இதனால் இந்த பகுதியில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த சாலையில் எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து, வத்திராயிருப்பு.

பொதுமக்கள் சிரமம்

விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகர் தபால் நிலையம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயசந்திரன், விருதுநகர்.

சேதமடைந்த பாலம்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் சேந்தநதி கிராமத்திலிருந்து அ.முக்குளம் செல்லும் பாலம் மழை காரணமாக சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாவீது பெரியதாஸ், நரிக்குடி.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மேல தெருவில் வாருகால் பாதை திறந்து கிடக்கிறது. பயன்பாட்டில் உள்ள பொது அடிகுழாயை சுற்றி கட்டுமான பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் அடிகுழாய் இருந்தும் இல்லாத நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு திறந்து கிடக்கும் வாருகாலை மூடுவதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோஜ், விருதுநகர்.

விபத்து ஏற்படும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டி இந்திரா நினைவு குடியிருப்பு பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்களும், மின் வயர்களும் சேதமடைந்து உள்ளன. மழைக்காலம் என்பதால் இந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யனார், மேட்டுப்பட்டி.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் அருகே சின்னவள்ளி குளத்தில் இருந்து ரோசல்பட்டி வரையுள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து கற்குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக சீரமைக்க வேண்டும்.

மனோஜ், சின்னவள்ளிகுளம்.

கழிவறை வசதி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், ரைஸ்மில் சாலையில் உள்ள தினசரி சந்தைக்கு‌ தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு கழிவறை வசதி இல்லை. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் தென்காசி சாலை இணைப்பு பகுதியில் கழிவறை வசதி செய்து தரவேண்டும்.

ஜெகநாதன், ராஜபாளையம்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சண்டையிட்டுக் கொள்வதால் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் நாய்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரகோபால், அருப்புக்கோட்ைட.

பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரியாபட்டி.


Next Story